Tamil Cine Koothu
News

4 நாட்களில் 40 கோடி – நேர்கொண்ட பார்வை

40 Crores In 4 days - Nerkonda Paarvai

சமீபத்தில் எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘நேர்கொண்ட பார்வை’ படம் 4 நாட்களில் 40 கோடி வசூல் செய்துள்ளது.

சனி ,ஞாயிறு தாண்டி நேற்றும் விடுமுறை என்பதால் நல்ல வசூல் இருக்கும் என எதிர்பார்க்கப் படுகிறது. சென்னையில் இந்தப் படம் முதல் 4 நாட்களில் மட்டும் 5.5 கோடி வசூல் செய்துள்ளது. ஒவ்வொரு நாளுமே 1 கோடியைத் தாண்டியே வசூல் செய்திருப்பதால் மிகவும் மகிழ்ச்சியில் இருக்கிறார் போனிகபூர்.

மேலும், வெளிநாட்டு வசூல் 1 மில்லியன் டாலரைத் தாண்டிவிட்டதாக தயாரிப்பாளர் போனி கபூர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். குறிப்பாக அமெரிக்காவில் 250கே டாலர்கள் வசூலித்துள்ளது. அஜித்தின் முந்தைய படமான ‘விஸ்வாசம்‘ படத்தை விட இது அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

விஸ்வாசம் திரைப்படத்துடன் ரஜினியின் பேட்ட திரைப்படம் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

40 Crores In 4 days – Nerkonda Paarvai

Related posts

ஆபாச சர்ச்சை கிளப்பும் ஜி வி பிரகாஷின் “பேச்சிலர்” படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்

Rasikan

நேர்கொண்ட பார்வையை நெருங்கும் கைதி

Rasikan

10 மணி நேரத்தில் பிகில் சிங்கப்பெண்னே படைத்த சாதனை

Rasikan