பாராளுமன்ற தேர்தலையொட்டி அனல் பறக்கும் தேர்தல் பிரசாரம், வாக்குறுதிகள் என அரசியல் களம் பரபரப்பாக காணப்பட்டுவரும் நிலையில், டி.டி.வி.தினகரன் தலைமையில் செயல்பட்டு வரும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் (அ.ம.மு.க.) நடிகர் விவேக் இணைந்துவிட்டார் என்றும், அக்கட்சி வேட்பாளர்களை ஆதரித்து சூறாவளி சுற்றுப்பயணத்தில் ஈடுபட உள்ளார் என்றும் சமூக வலைத்தளங்களில் தகவல் தீயாய் பரவியது.
ஆனால் இந்த தகவல்களை நடிகர் விவேக் மறுத்து உள்ளார். இதுகுறித்து அவர் தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில்
“இதன் மூலம் அனைத்து ஊடகங்களுக்கும் நான் தெரிவிப்பது. நான் எந்த கட்சியிலும், அமைப்பிலும் இல்லை. பொதுமக்களில் ஒருவன். ஓட்டுப்போடுவது ஜனநாயகக் கடமை. அதை செவ்வனே செய்வேன். அனைத்து கட்சியினர், தலைவர்கள் என் நண்பர்கள்.வதந்திகளை நம்ப வேண்டாம்” என தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் அனைத்து ஊடகங்களுக்கும் நான் தெரிவிப்பது. நான் எந்த கட்சியிலும், அமைப்பிலும் இல்லை. பொதுமக்களில் ஒருவன். ஓட்டுப்போடுவது ஜனநாயகக் கடமை. அதை செவ்வனே செய்வேன். அனைத்து கட்சியினர், தலைவர்கள் என் நண்பர்கள்.வதந்திகளை நம்ப வேண்டாம்
— Vivekh actor (@Actor_Vivek) March 30, 2019
Actor Vivek Open Statement On Current Political News