Tamil Cine Koothu
News

நீண்ட இடைவெளிக்குப் பின் ரஜினி படத்தில் நடிக்கும் பிரபல நடிகை

தர்பார் திரைப்படத்தை தொடர்ந்து இயக்குனர் சிவா இயக்கத்தில் உருவாக இருக்கும் ‘தலைவர் 168’ படத்தில் நடிக்கவுள்ளார் சூப்பர் ஸ்டார் ரஜினி.

சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இத்திரைப்படத்தின் ஆரம்ப கட்ட பணிகள் தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது.

இமான் இசையமைக்கவுள்ள இத்திரைப்படத்தில், பிரபல காமெடி நடிகர் சூரி இணைந்துள்ளதை படக்குழுவினர் உத்தியோகபூர்வமாக அறிவித்திருந்தனர்.

இந்நிலையில் தற்போது இப்படத்தில் நடிகை மீனாவும் நடிக்கவுள்ளதாக கோடம்பாக்க செய்திகள் தெரிவிக்கின்றன. இதுகுறித்த உத்தியோகபூர்வ அறிவிப்புக்கள் விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நடிகை மீனா ரஜினியுடன் அன்புள்ள ரஜினிகாந்த், எஜமான், வீரா, முத்து, குசேலன் போன்ற திரைப்படங்களில் நடித்துள்ள நிலையில், மிக நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் ரஜினியுடன் இணைய இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Meena

Actress Meena Also Joins With Thalaivar 168

Related posts

எஸ்.ஜே.சூர்யாவின் மான்ஸ்டர் பட கதையை கேட்டு சிரித்த அமிதாப் பச்சன்

Rasikan

சிவகார்த்திகேயனின் ‘ஹீரோ’ படத்தின் டீசரை வெளியிடும் சல்மான் கான்

Rasikan

விரைவில் அரண்மனை 3

Rasikan

Leave a Comment