Thalapathy 63
சர்க்கார் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தளபதி விஜய் அட்லீ இயக்கத்தில் தளபதி 63 இல் நடித்துவருகிறார்.
தளபதி 63 இல் இதுவரை தளபதி விஜயுடன், நயன்தாரா, விவேர்க், நடிகர் கதிர், ஆனந்தராஜ், ஜோகி பாபு என பல நட்சத்திரங்களின் பெயர்கள் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளன.
தளபதி 63 விளையாட்டு துறைசார்ந்த அரசியலும் பேசும் படமாக உருவாக்கி வருவதாக கூறப்படும் நிலையில் தளபதி 63 இல் பிரபல அரசியல் வாதியான நாஞ்சில் சம்பத் இணையவுள்ளதாக கோடம்பாக்க செய்திகள் தெரிவிக்கின்றன.இதற்க்கான அறிவிப்புகள் மிகவிரைவில் வெளிவரும் என அந்த செய்திகள் மேலும் தெரிவித்துள்ளன.
ஏற்கனவே தளபதியின் சர்க்கார் திரைப்படத்தில் அரசியல்வாதியான பல கருப்பையா நடித்த நிலையில் இதில் நாஞ்சில் சம்பத் நடிக்கவிருப்பதாக கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே நாஞ்சில் சம்பத் பாலாஜியின் LKG திரைப்படத்தில் நடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.