TamilCineKoothu
News

பிகில் ஷூட்டிங் ஸ்பாட்டில் அட்லீயின் நெகிழ்ச்சியான செயல்

தளபதி விஜயின் பிகில் திரைப்படம் வரும் தீபாவளி அன்று பிரமாண்டமாக உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.

இத்திரைப்படத்தில் தளபதி விஜயுடன் நயன்தாரா, ஜாக்கி ஷெராஃப், யோகிபாபு, கதிர், விவேக், டேனியல் பாலாஜி, ஆனந்த்ராஜ், இந்துஜா உள்ளிட்ட பலர் நடிக்க, விஷ்ணு ஒளிப்பதி, ரூபன் படத்தொகுப்பு, ஏ.ஆர்.ரஹ்மான் இசை, அட்லி இயக்கம் என படத்தை பெரும் பொருட்செலவில் ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

இந்நிலையில் பிகில் திரைப்படத்தில் நடித்த தேவதர்ஷினி அளித்துள்ள செவ்வி ஒன்றில் பிகில் ஷூட்டிங் ஸ்பாட்டில் அட்லீ செய்த நெகிழ்ச்சியான செயல் ஒன்று பற்றி விபரித்துள்ளார்.

அதில் படப்பிடிப்பு காட்சி ஒன்றின் போது, தேவதர்ஷினி மற்றும் விஜய் ஆட்டோவில் செல்வது போன்ற காட்சி படமாக்கப்பட்ட போது , அங்கு அந்த ஆட்டோவுடன் ஓட்டுனரும் இருந்துள்ளார்.

மேலும் ரிகர்சல் பார்க்கும்போது அந்த ஆட்டோ ஓட்டுநர் தான் ஆட்டோ ஓட்டியுள்ளார். இந்நிலையில் ஆட்டோ ஓட்டுனருடன் தேவதர்ஷினி
உரையாடிய போது தான் விஜய் ரசிகர் என கூறியுள்ளார் ஆட்டோ ஓட்டுநர். மேலும் விஜய்யை பார்க்கப்போகிறோம் என்கிற பூரிப்பில் இருந்துள்ளார்.

ஆனால் ஷாட் எடுக்கும்போது அவரை இறக்கிவிட்டு வேறொரு நடிகரை ஆட்டோஓட்ட சொல்லியுள்ளார் அட்லீ. அதை பார்த்து அந்த உண்மையான ஆட்டோ டிரைவர் மிகுந்த கவலைப்பட்டுள்ளார்.

இதை கவனித்த தேவதர்ஷினி அட்லீயிடம் கூற, அவர் வருத்தப்படக்கூடாது என்பதற்காக உடனடியாக அந்த நடிகரை அனுப்பிவிட்டு உண்மையான ஆட்டோ டிரைவரை வைத்தே அந்த காட்சியை எடுத்துள்ளார்.

இதுவே அட்லீயின் குணம் என நெகிழ்ச்சியாக சம்பவத்தை பகிர்ந்துள்ளார்.

Atlee Real Character

Atlee Real Character

Related posts

90ml இலிருந்து பிக் போஸ்சில் பங்குபற்றும் போட்டியாளர்!!!

Rasikan

தளபதி 64 – சமூகவலைத்தளங்களை தெறிக்கவிடும் தளபதி ரசிகர்கள்

Rasikan

தெறி படத்தில் வந்த குழந்தையின் வைரல் புகைப்படம்

Rasikan