News

ஷாருக்கான் திரைப்படத்துக்கு அட்லீக்கு இத்தனை கோடி சம்பளமா?

தற்போது விஜய்யை வைத்து பிகில் படத்தை இயக்கி முடித்துள்ள அட்லீ, அடுத்து ஷாருக்கானை வைத்து படம் இயக்க உள்ளதாக ஏற்கனவே தெரிவித்திருந்தோம்.

இந்நிலையில் அத்திரைப்படத்துக்கு அட்லீயின் சம்பளம் 30 கோடி ரூபாய் என முடிவுசெய்யப்பட்டுள்ளதாக கோடம்பாக்க தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆக்‌ஷன் கதையம்சம் கொண்ட அத்திரைப்படத்தை ஷாருக்கானின் தயாரிப்பு நிறுவனமான ரெட் சில்லி எண்டர்டெயின்மெண்ட் தயாரிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

மேலும் தமிழ், இந்தி மொழிகளில் உருவாக்க இருக்கும் இப்படத்தின்படப்பிடிப்புகள் வரும் டிசம்பர் மாதம் தொடங்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

2013-ம் ஆண்டு முதல் ‘ராஜா ராணி’ ‘தெறி’, ‘மெர்சல்’ என அடுத்தடுத்து வெற்றி படங்களை கொடுத்து, தமிழ் சினிமாவில் வெற்றி இயக்குனராக வலம் வருகிறார் அட்லீ.

Atlee Salary For Shahrukh Khan’s Movie

Related posts

காப்பான் இசை வெளியீட்டு விழா சிறப்பு விருந்தினர்கள்

Rasikan

பைக்கில் சென்று வாக்கு செலுத்திய மாதவன்

Rasikan

பட வாய்ப்புக்கள் இல்லாததால் வருத்தத்தில் இருக்கும் ஆண்ட்ரியா

Rasikan