Tamil Cine Koothu
News

பெண்கள் கட்டுப்பாட்டோடு இருக்க வேண்டும் – பாக்யராஜின் சர்ச்சை பேச்சுக்கு வலுக்கும் கண்டனங்கள்

‘கருத்துக்களை பதிவு செய்’ என்ற படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் இயக்குனர் பாக்யராஜ் பேசிய விடயங்கள் சர்ச்சைகளை உண்டாக்கியுள்ளது.

நிகழ்வில் பேசிய பாக்யராஜ் ” ‘ஊசி இடம் கொடுக்காமல் நூல் நுழையாது’ எனவே, பெண்கள் கவனமாக இருந்தால் தப்பு நடக்காது. பசங்களை மட்டுமே தப்பு சொல்லக்கூடாது. வள்ளுவர் கற்பை பற்றி பெண்களுக்குத்தான் அதிகாரம் எழுதி இருக்கிறார்.

ஆண் தவறு செய்தால் போகிற போக்கில் வந்து விடுவான். பெண்கள் தவறு செய்தால் கள்ளக்காதலுக்காக புரு‌‌ஷனை, குழந்தையை கொன்றுவிட்டதாக செய்திகள் வருகின்றன. அதனால்தான் பெண்கள் கட்டுப்பாட்டோடு இருக்க வேண்டும். அவர்களுக்கு சுய கட்டுப்பாடு வேண்டும்’ என சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார்.

இதனையடுத்து பாக்யராஜ் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தமிழக மகளிர் ஆணையத்துக்கு ஆந்திர மகளிர் ஆணையத் தலைவி வசிரெட்டி பத்மா கடிதம் எழுதியுள்ளார். இதனையடுத்து இயக்குநர் பாக்யராஜ் மீது நடவடிக்கை எடுக்கப்பட வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது

Bhagyaraj Speech About girls

Related posts

‘பிகில்’ பெயரை பயன்படுத்தி ப்ரோமோஷன் செய்யும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ்!

Rasikan

விஜய் சேதுபதி படத்தில் இணையும் பிக் பாஸ் பிரபலம்

Rasikan

பெற்ற தந்தைக்கும் கலையுலக தந்தைக்கும் சிலை திறந்த கமல்ஹாசன்

Rasikan