Tamil Cine Koothu
News

போலீஸ் பாதுகாப்பு கோரிய பிக் பாஸ் பிரபலம்

கமல் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் மட்டுமல்ல, அதன் பின் சமூகவலைத்தளங்கள் உட்பட பொது தளங்களில் சர்ச்சைகளுக்கு உரியவராகியுள்ளார் நடிகையும் பிக் பாஸ் போட்டியாளருமான காயத்ரி ரகுராம்.

சமீபத்தில் இந்து கடவுள்களை அவதூறாக பேசியதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனை கடுமையாக விமர்சித்திருந்தார் நடிகை காயத்ரி ரகுராம். இதனையடுத்து இவரை சர்ச்சைக்குரிய நபராக கருதிய டுவிட்டர் இதுவரை அவரின் கணக்கை முடக்கி வைத்துள்ளது.

மேலும் காயத்திரிக்கு பல இடங்களில் இருந்தும் மிரட்டல்கள் வந்துள்ள நிலையில், சென்னை போலீஸ் கமிஷனரை சந்தித்து புகார் மனு ஒன்றை கொடுத்துள்ளார் நடிகை.

அதில் ‘விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் தொலைபேசி மூலமாக தொடர்ந்து மிரட்டல் விடுப்பதால் தனக்கும், தன்னுடைய வீட்டிற்கும் உரிய போலீஸ் பாதுகாப்பு வழங்கவேண்டும்’ என கோரி மனு கொடுத்துள்ளார்.

bigg boss celebrity asked police security

bigg boss celebrity asked police security

Related posts

கவுதம் மேனனின் அடுத்த படம், ஹீரோ இவர் தான்

Rasikan

தீவிபத்தில் சிக்கிய ஐஸ்வர்யா ராய் மானேஜரை காப்பாற்றி ரியல் ஹீரோவான ஷாருக்கான்

Rasikan

இனி எல்லா வாய்ப்புகளையும் ஏற்க மாட்டேன் – ரகுல் பிரீத் சிங்

Rasikan

Leave a Comment