Tamil Cine Koothu
Bigg Boss Tamil News

அடுத்த பிக் பாஸ் சீசனுக்கும் தொகுப்பாளராகவும் கமல் ஒப்பந்தம்

Bigg Boss Season 4 Also Will Be Hosted By Kamal

பிக் பாஸ் சீசன் 4 தொகுப்பாளராகவும் கமல் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் கமல் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் 3-வது சீசன் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது.

இந்நிலையில் அடுத்த பிக் பாஸ் சீஸனின் போட்டியின் தொகுப்பாளர் யாராக இருக்கும் என்று பல்வேறு தகவல்கள் வெளியாகி இருந்தன. இதில் குறிப்பாக சரத்குமார், சூர்யா மற்றும் சிம்பு ஆகியோர் பெயர்கள் அடிபட்டது.

இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் பதிலளித்துள்ள விஜய் தொலைக்காட்சி “அடுத்த சீசனுக்கு கமல் தான் தொகுப்பாளர். வேறு யாரிடமும் நாங்கள் பேசவில்லை. வேறு யாரையும் தொகுப்பாளராகக் கொண்டு வரும் எண்ணமுமில்லை” என்று தெரிவித்துள்ளது. இதன் மூலம் பிக் பாஸ் சீசன் 4 தொகுப்பாளர் கமல் என்பது மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

பிக் பாஸ் நிகழ்ச்சியைத் தமிழில் நடத்த விஜய் தொலைக்காட்சி 5 ஆண்டுகள் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Bigg Boss Season 4 Also Will Be Hosted By Kamal

Related posts

தனுஷின் அர்ப்பணிப்பை சுட்டிக்காட்டி சிம்புவை வெளுத்துவாங்கும் சுரேஷ் காமாட்சி

Rasikan

கவர்ச்சியான பெல்லி டான்ஸ் ஆடிய ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர்

Rasikan

அசிங்கம் – செந்தில் கணேஷ்-ராஜலக்ஷ்மி ஜோடியை கிழித்த புஷ்பவனம் குப்புசாமி

Rasikan

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.