Tamil Cine Koothu
News

அசுரன் திரைப்படத்துக்கு கம்யூனிஸ்ட் கட்சி பாராட்டு

Asuran

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ், மஞ்சு வாரியர், கென் கருணாஸ், டிஜே, பாலாஜி சக்திவேல் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘அசுரன்’ ஒரு அசுரத் திரைப்படம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் புகழாரம் சூட்டியுள்ளார்.

இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தங்களுடைய இணையத்தில் பாராட்டுத் தெரிவித்துள்ளது.

அதில் “நாவல்களைத் திரைப்படமாக்கும் முயற்சி ஒரு பெரிய சவாலானது. இலக்கிய வாசிப்பாளர்களிடையே பூமணியின் நாவல் ஏற்படுத்திய அதே தாக்கத்தை இந்தப் படம் லட்சக்கணக்கான பார்வையாளர்களுக்கு ஏற்படுத்தியிருப்பது பாராட்டி வரவேற்கப்பட வேண்டியது. மேலும் சாதி ஆணவ சக்திகளின் சாதி என்ன என்பதைக் குறிப்பிடாமல் பேசுவது இப்படத்தின் வெற்றிக்குத் துணையாக அமைந்துள்ளது. கதை நிகழும் கிராமம், வீடுகள், குடிசைகள், காடுகள், காவல் நிலையம், நீதிமன்றம் அனைத்தும் தத்ரூபமாக அமைந்திருப்பது படத்தின் செய்திக்குத் துணையாகிறது.

படம் பார்ப்பவர்கள் மனங்களில் சாதியம் கொடூரமானது, சாதிக் கொடுமைகள் நடக்கக்கூடாது, சாதிப் பாகுபாடு ஒழிக்கப்பட வேண்டும், அதற்கு நாமும் ஏதாவது செய்தாக வேண்டும் என்ற எண்ணம் ஏற்படுத்தப்படுகிறது. அவ்வகையில் படத்தின் நோக்கம் நிறைவேறியுள்ளது”.

என அதில் பதிவிடப்பட்டுள்ளது.

Communist Party Appreciates Asuran Movie

Related posts

வருடத்துக்கு ஒருவர் குடும்பம் நடத்த தேவை – ஸ்ரீரெட்டி

Rasikan

வைரலாகும் பிக் பாஸ் லொஸ்லியாவின் பள்ளி பருவ வீடியோ

Rasikan

தளபதியை திருமணம் செய்ய ஆசைப்படும் பிக்பாஸ் ரைசா

Rasikan