Dhanush – Karthik Subbaraj
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்த பேட்ட திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து, வட சென்னை, மாரி 2 படங்களுக்கு பிறகு அசுரன் படப்பிடிப்பில் பிசியாக இருக்கும் தனுஷ், அடுத்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார்.
இத்திரைப்படத்தின் கதை அமெரிக்காவை களமாக கொண்டு ஆரம்பிக்கப்பட இருப்பதாக கோடம்பாக்க செய்திகள் கூறுகின்றன.
தனுஷ் படத்திற்காக கார்த்திக் சுப்புராஜ் தற்போது முழுவீச்சில் கதை எழுதி வருகிறார்.
விரைவில் எழுத்துப் பணிகள் நிறைவுபெற்று ஜூன் மாதத்தின் முதல் வாரத்தில் படப்பிடிப்பு பணிகள் தொடங்க இருக்கிறது. படத்தின் பெரும்பாலான பகுதிகள் நியூயார்க் நகரில் படமாக்கப்பட உள்ளது. இந்த படத்தை ஒய் நாட் ஸ்டூடியோஸ் தயாரிக்க இருக்கிறது.
கவுதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் நடித்து 2 ஆண்டுகளாக வெளியாகாமல் இழுபறியில் இருந்த எனை நோக்கி பாயும் தோட்டா திரைப்படமும் ஒருவழியாக தணிக்கை சான்றிதழ் பெற்று மிக விரைவில் திரைக்கு வர இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது..