Fans Waiting For Tharshan's Fire Against Vanitha

மீண்டும் வனிதாவுக்கு மணி கட்டுவாரா தர்ஷன்???

Bigg Boss Tamil News
Fans Waiting For Tharshan's Fire Against Vanitha

மீண்டும் பிக் பாஸ் வீட்டினுள் வந்திருக்கும் வனிதாவை பார்க்கும் போது ஒரு அடிபட்ட ஒரு பாம்பு பழி வாங்க வந்துள்ளதாக தெரிகிறார்.

முன்பு வீட்டில் இருந்த போது அனைத்து போட்டியாளர்களும் வனிதாவுக்கு பணிந்து சென்றநிலையில், வெளியேற்ற படலத்துக்கு வராத வனிதா ஒரு சர்வாதிகார போக்குடன் நடந்துகொண்டார். ஆனால் ஒரு குறிப்பிட்ட நிலையில் வெகுண்டெழுந்த தர்சன் வனிதாவின் பல குறைகளை வனிதாவே எதிர்பார்க்காத வகையில் கடுமையான தொனியில் சுட்டிக்காட்டினார். இதனையடுத்து வந்த வெளியேற்றும் படலத்தில் தாக்கு பிடிக்கமுடியாமல் தோற்றுப்போன வனிதா பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

தனது வெளியேற்றத்துக்கு தர்சனே காரணம் என எண்ணம் கொண்டிருக்கும் வனிதா தர்சனின் பிக் போஸ் கனவை தகர்க்கும் எண்ணத்துடன் மீண்டும் பிக் பாஸ் வீட்டினுள் வந்துள்ளதாக தெறிக்கிறது.

மற்றைய போட்டியாளர்களால் தர்சன் வெற்றியாளராக தேர்ந்தெடுக்கப்பட்டதை சகித்துக்கொள்ளமுடியாத வனிதா , அதை பிச்சை என கூறிப்பிட்டுளார்.

எல்லோரும் சம தகுதியான போட்டியாளர்கள் என குறிப்பிடும் வனிதா, அவ் சம போட்டியாளர்களினலையே கமல் முன் ஒப்பு கொள்ளப்பட்ட தர்சனின் தேர்வை “ஒரு பிச்சை” தேர்வு என மட்டம் தட்டுகிறார். இது கமலால் சொல்லி தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு நிகழ்வே.. ஆக இதன் மூலம் கமலையும் சேர்த்தே தாக்குதல் தொடுக்கிறார்.

அதுமட்டுமின்றி மற்றைய போட்டியாளர்கள் தர்சனுக்கு எதிராக திரும்ப மாட்டார்கள் என்பதை தெரிந்துகொண்ட வனிதா, சேரன் மற்றும் மதுமிதாவை கொம்பு சீவி தர்சனுக்கு எதிரான வலுவான போட்டியாளர்கள் அவர்கள் என அவர்களை உசுப்பேத்தி விட்டுள்ளார்.

இது இவ்வாறு தொடர , இவ் நிலை தொடரும் பட்ச்சத்தில் மீண்டும் தர்சன் வனிதாவுக்கு தக்க பாடம் புகட்டுவாரா இல்லை வனிதாவின் மாய பேச்சுகளுக்கு செவிசாய்த்து தனது விளையாட்டு பாணியை மாற்றி கொள்வாரா என்பதே ரசிகர்களின் கெல்லவி???????

இன்று வரை தனது தவறுகளை தானே திருத்தி கொள்ளாத மற்றும் விளையாட தெரியாமல் போட்டியில் தோற்றுப்போன ஒருவர் வெற்றியை நோக்கி சென்றுகொண்டிருக்கும் போட்டியாளர்களுக்கு அறிவுரை வழங்குவது ரசிகர்கள் மத்தியில் காதில் ரத்தத்தையும், எரிச்சலையும் உண்டாகிறது.

Fans Waiting For Tharshan’s Fire Against Vanitha

Tagged

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *