Tamil Cine Koothu
News Videos

திமுகவில் இருந்து ராதாரவி சஸ்பெண்ட்

தானே விலகினேன் என்கிறார் ராதாரவி

நடிகை நயன்தாரா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதற்காக நடிகர் ராதாரவிக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்த நிலையில், தற்போது அவர் கட்சியில் இருந்து விலக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கொலையுதிர் காலம் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் நடிகர் ராதாரவி பேசும்போது, நயன்தாரா பற்றி சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்தநிலையில், அவரது பேச்சுக்கு இயக்குனர் விக்னேஷ் சிவன் உள்ளிட்ட பலரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இதனையடுத்து அவர் திமுகவில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் வெளியிட்டார். அவர் தனது அறிக்கையில், நடிகர் ராதாரவி கழக கட்டுப்பாட்டை மீறியும் கழகத்திற்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டு வருவதால், திமுகவின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் அவர் தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுவதாக குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், நடிகர் ராதாரவிக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் டுவிட்டர் பதிவில், “பெண்ணுரிமை முன்னிறுத்தும் திமுகவில் அங்கம் வகிக்கும் நடிகர் ராதாரவியின் திரைத்துறை சார்ந்த பெண் கலைஞர்கள் குறித்த கருத்து ஏற்க இயலாதது. கடும் கண்டனத்திற்குரியது. கழகத்தினர் யாவரும் கண்ணியம் குறையாத வகையில் கருத்துகளை தெரிவிக்க வேண்டும். மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்” என குறிப்பிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஆனால் இவற்றை மறுத்துள்ள ராதா ரவி தானே காட்சியில் இருந்து விலகியுள்ளதாக அறிவித்துள்ளார்.

திமுகவில் இருந்து ராதாரவி சஸ்பெண்ட்

Related posts

‘சூரரைப் போற்று’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நேற்றுடன் நிறைவு

Rasikan

நேர்கொண்ட பார்வை டிக்கெட் – அஜித் ரசிகர்கள் செம்ம மாஸ்

Rasikan

இந்த வேடத்தில் நடிக்க தான் பிரியங்கா சோப்ராவுக்கு ஆசையாம்

Rasikan

Leave a Comment