Tamil Cine Koothu
News

முதலமைச்சரானால் நேர்மையாக இருப்பேன் – கமல்ஹாசன்

தான் முதலமைச்சரானால் நேர்மையாக இருப்பேன் என சென்னையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சித்தலைவருமான கமல்ஹாசன் கூறியுள்ளார்.

அங்கு கருத்து தெரிவித்த அவர் “நடிகர்கள் என்பவர்கள் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் வந்து செல்பவர்கள் தான். அப்துல்கலாமுக்கு சமாதி கட்ட நாங்கள் வரவில்லை, அவரை எல்லாருடைய நெஞ்சிலும் கொண்டு செல்ல வேண்டும் என முயற்சி செய்து வருகிறோம். தலைவர் என்று சொல்வதில் அகந்தை உள்ளது தோழர் என்று சொல்லும்போது தொடர்ச்சி உள்ளது. முதலமைச்சரானால் நான் நேர்மையாக இருப்பேன் ,

விவசாயம் சரியில்லை என்று வெறும் கோபத்துடன் இளைஞர்கள் அரசியல் களத்திற்கு வராதீர்கள், முறையான பயிற்சி பெற்று விவசாயத்தை காக்க முன்வர வேண்டும்,

மாணவர்கள் ஏன் இன்னும் அரசியலில் ஈடுபடாமல் இருக்கிறீர்கள்? அப்துல் கலாம் கண்ட கனவை நனவாக்க, மாற்றத்தை நிகழ்த்த மாணவர்கள் அரசியலுக்கு வாருங்கள்” என்றும்

“புத்தரும், அப்துல் கலாமும் ஒன்றுதான் நாம் தான் வெவ்வேறாக நினைத்து பேசிக் கொண்டிருக்கிறோம்” எனவும் அக்கூட்டத்தில் பேசியுள்ளார்.

If I Become Chief Minister, I’ll be Honest – Kamal Haasan

Related posts

டிஸ்னி ‘ஃப்ரோஸன் 2’ எல்சா கதாபாத்திரத்துக்கு குரல் கொடுக்கும் ஸ்ருதி ஹாசன்

Rasikan

பிக் பாஸ் ரைசாவின் புதிய போட்டோஷூட் புகைப்படங்கள்

Rasikan

திருமணத்தின் போது பாட்டியின் கிழிந்த புடவையைத்தான் கட்டிக்கொண்டேன் – ராதிகா ஆப்தே

Rasikan