Tamil Cine Koothu
News

“அசுரன்” படம் மட்டுமல்ல பாடம் – படம்பார்த்துவிட்டு மு.க.ஸ்டாலின் கருத்து பகிர்வு

It Is Not A Movie, It Is A Lesson - M K Stalin

பூமணி எழுதிய வெக்கை நாவலை அடிப்படையாக கொண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள அசுரன் படத்தை பல அரசியல் பிரபலங்களும் பார்த்து தமது பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் அசுரன் திரைப்படத்தை தூத்துக்குடியில் உள்ள திரையரங்கில் நேற்று இரவு திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும் பார்த்து ரசித்துள்ளார்.
அதன் பின் தனது சமூகவலைத்தளத்தில் கருத்து தெரிவித்துள்ள மு.க.ஸ்டாலின் “அசுரன் – படம் மட்டுமல்ல பாடம்” என பாராட்டியுள்ளார்.

அதில் மேலும் கருத்து தெரிவித்துள்ள ஸ்டாலின் ” பஞ்சமி நில உரிமை மீட்பை மையமாக வைத்து சாதிய சமூகத்தைச் சாடும் – சாதி வன்மத்தை கேள்வி கேட்கும் துணிச்சல்காரன்! கதை-களம்-வசனம் என வென்று காட்டியிருக்கும் வெற்றிமாறன்அவர்களுக்கும், வாழ்ந்து காட்டியிருக்கும் தனுஷ் அவர்களுக்கும் பாராட்டுகள்” என குறிப்பிட்டுள்ளார்.

அசுரன் திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று குறிப்பிடத்தக்கது.

It Is Not A Movie, It Is A Lesson - M K Stalin

It Is Not A Movie, It Is A Lesson – M K Stalin

Related posts

தனுஷ் பட தலைப்புக்கு எதிர்ப்பு – முடிவை மாற்றுகிறது படக்குழு

Rasikan

தளபதி 63 படப்பிடிப்பில் விபத்து

Rasikan

சுட்டு பிடிக்க உத்தரவு – பெருகும் வரவேற்பால் அதிகரிக்கப்பட்ட தியேட்டர்கள்

Rasikan