News

காத்துவாக்குல சமந்தா, நயன்தாராவிடம் காதல் செய்யும் விஜய் சேதுபதி

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் கடந்த 2015-ம் ஆண்டு வெளியான நானும் ரவுடி தான் திரைப்படத்தை தொடர்ந்து இக்கூட்டணி இணையும் திரைப்படம் குறித்த புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது படக்குழு.

இத்திரைப்படம் குறித்து 2016-ம் ஆண்டே தகவல் வெளியான போதும், பின்னர் கிடப்பில் போடப்பட்டது. தற்போது இந்த படத்தின் வேலையில் மீண்டும் விக்னேஷ் சிவன் மும்முரமாக ஈடுபட்டுள்ளார்.

Kaathu Vaakula Rendu Kaadhal

செவன் ஸ்கிரீன் நிறுவனமும், விக்னேஷ் சிவனின் சொந்த தயாரிப்பு நிறுவனமான ரெளடி பிக்சர்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்க உள்ள இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக சமந்தா, நயன்தாரா ஆகியோர் நடிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அனிருத் இப்படத்திற்கு இசையமைக்க உள்ளார். படப்பிடிப்பு வருகிற மே மாதம் தொடங்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Kaathu Vaakula Rendu Kaadhal

Related posts

வருட இறுதியில் சூர்யாவுடன் மோதும் சிவகார்த்திகேயன்

Rasikan

ராஜமவுலி படத்தில் மீண்டும் நடிக்கும் அனுஷ்கா

Rasikan

தள்ளிப்போகும் சூர்யாவின் அடுத்த படத்தின் வெளியீடு?

Rasikan

Leave a Comment