Tamil Cine Koothu
News

பிரமிக்கவைக்கும் கமல் – திரையுலகில் 60 ஆண்டுகள்

kamal 60 years

சகலகலா வல்லவன்

இன்று பிறந்தநாளை கொண்டாடும் நடிகர் கமல்ஹாசன் திரைத்துறைக்கு வந்து 60 ஆண்டுகள் ஆகிறது.

இந்த 60 ஆண்டுகளில் தமிழ் திரையுலகை மற்றுமின்றி உலக சினிமாவையே தன்னை நோக்கி திரும்பி பார்க்க வைத்தவர் கமல்.

கமலின் 60 ஆண்டு கால கலைப்பயணத்தில் இடம்பெற்ற பிரமிக்கவைக்கும் சாதனைகளின் சிறு தொகுப்பு இதோ….

  1. kamal 60 years 5 வயதில் களத்தூர் கண்ணம்மா படத்தில் (1959)
    நடிக்கவந்த கமல்ஹாசன் இந்தியாவில், அறிமுகமான முதல் படத்திலேயே சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான ஜனாதிபதி தங்க பதக்கம் பெற்றுக்கொண்டவரானார்.
  2. kamal 60 years சகலகலா வல்லவன் ஆகிய கமல் நடிப்பை தாண்டி மிகச்சிறந்த நடன கலைஞர், பாடகர், இயக்குனர், தயாரிப்பாளர், பாடல் ஆசிரியர், தொழில்நுட்ப கலைஞர், ஒப்பனை கலைஞர் என்று பல திறமைகளை வெளிக்காட்டியுள்ளார்.
  3. kamal 60 years இந்திய திரையுலக வரலாற்றில் முதல் முறையாக ஒரு படத்தில் நடிப்பதற்கு ரூ.1 கோடிக்கு மேல் சம்பளம் வாங்கிய முதல் நடிகர் என்ற பெருமையை பெற்றவர்.
  4. kamal 60 years 5 மொழிகளில் ஒருபடம் வெளியாகி அனைத்து மொழிகளிலும் வெற்றி பெற்ற ஒரே நடிகர் கமல்.
  5. kamal 60 years கமல்ஹாசன் நடிப்பில் வெளியான “நாயகன்” படம் 1997-ம் ஆண்டு உலகின் சிறந்த நூறு திரைப்படங்களை வெளியிட்ட டைம் இதழின் பட்டியலில் இடம்பெற்றது.
  6. kamal 60 years கமல்ஹாசன் நடிப்பில் உருவான ஆளவந்தான் படத்தில் வந்த காட்சிகளை பிரபல ஆலிவுட் டைரக்டர் கியூன்டின் டரன்டினோ தனது படத்தில் பயன்படுத்திக்கொண்டார்.
  7. kamal 60 years இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் கமல்ஹாசன் 10 வேடங்களில் நடித்த தசாவதாரம் அவரின் திரையுல பயணத்தில் இன்னொரு மைல்கல்.
  8. kamal 60 years இளம் நடிகர்களுக்கு சிறந்த நடிகருக்கான விருதை தாருங்கள். எதிர்காலத்தில் எனக்கு மீண்டும் மீண்டும் அந்த விருதை தர வேண்டாம் என விருது ஏற்பாட்டாளர்களுக்கு கூறி இளைஞர்களுக்கு ஊக்கம் கொடுத்துவருபவர்.
  9. kamal 60 years தமிழ் நடிகர்களில் ரசிகர்களை நற்பணியில் இறக்கிய முதல் நடிகர் கமல்ஹாசன்தான்.
  10. kamal 60 years தமிழில் அவருக்குள்ள அதீத புலமை ரசிகர்களை மேலும் அவர்பால் ஈர்த்து வைத்துள்ளது.
kamal 60 years

kamal 60 years

Related posts

ஆணின் அந்த இடத்தை பிடித்து அழுத்திய டாப்சீ – விளாசும் நெட்டிசன்கள்

Rasikan

லிடியன் நாதஸ்வரம் குட்டிப்பையனைப் பார்த்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்

Rasikan

‘டைட்டில் செம’ சாந்தனுவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த தளபதி

Rasikan

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.