News

தனுஷின் ‘கர்ணன்’ படத்தை தடை செய் – கருணாஸின் முக்குலத்தோர் புலிப்படை

கலைப்புலி எஸ். தாணு தயாரிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் படம் கர்ணன். இந்நிலையில் கர்ணன் படத்தை தடை செய்ய வேண்டும் என்றும், மாரி செல்வராஜை கைது செய்ய வேண்டும் என்றும் கருணாஸின் முக்குலத்தோர் புலிப்படை அமைப்பு சார்பாக காவல்துறை தலைவரிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.

karunas Against Dhanush 'Karnan" Movie

அவ் புகார் மனுவில் “1991-ல் கொடியன்குளம் மணியாச்சி சாதி கலவரத்தை மையப்படுத்து எடுக்கப்பட்டு வரும் கர்ணன் படத்தை தடை செய்ய வேண்டும். மற்றும் அந்த படத்தின் படப்பிடிப்பை திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டத்தில் எடுப்பதற்கு தடை விதிக்க வேண்டும்.

தென்மாவட்டங்களில் அமைதியான சூழ்நிலை நிலவி வருகின்ற நிலையில் இதுபோன்ற திரைப்படங்களால் மீண்டும் ஒரு கலவர சூழ்நிலை ஏற்படுகிறது. ஆகையால் இதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் மற்றும் அந்தத் திரைப்படத்தில் மணியாச்சி காவல்நிலையம் என்று பெயரிட்டு அந்த காவல்நிலையத்தை தனுஷ் தாக்குவது போன்ற காட்சிகள் இடம்பெற்றிருக்கிறது. இது காவல்துறை கண்ணியத்தையும் கெடுப்பதாக அமைகிறது.

குறிப்பாக அந்தத் திரைப்படத்தில் தேவர் சமூகத்தை மிகவும் விமர்சித்து வருகிற மாதிரி காட்சிகள் இடம்பெறுகிறது. தொடர்ந்து இதுபோன்ற திரைப்படஙகள் எடுத்து இரு சமூக மக்களிடையே சாதி கலவரத்தை தூண்டி வருகிற மாரி செல்வராஜை கைது செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாதியத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்டதாக பலரால் குற்றம் சாட்டப்பட்ட அசுரன் திரைப்படத்தில் கருணாஸின் மகன் நடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

karunas Against Dhanush 'Karnan" Movie

karunas Against Dhanush ‘Karnan” Movie

Related posts

“இந்த பூமி எவனுக்கும் , அவன் அப்பன் வீட்டு சொத்து கிடையாது” – ரஜினி பட இயக்குனர்

Rasikan

விவசாயிகள் சங்க கட்டடம் கட்டி கொடுத்த விஜய்சேதுபதி

Rasikan

பேய்களுக்கு வில்லியாக களமிறங்கும் பிக் பாஸ் சாக்‌ஷி அகர்வால்

Rasikan