Bigg Boss Tamil News

காலம் சேரனுக்கு புகட்டிய பாடம்

வலிக்கு வலி

கமல் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கடந்தவாரம் இடம்பெற்ற வெளியேற்றும் போட்டியாளர்களை தெரிவு செய்யும் திறந்த தெரிவுகளின் போது , கவின் சேரன் மற்றும் ஷெரின் பெயர்களை குறிப்பிட்டு “நீங்கள் இருவரும் பார்க்காத வெற்றிகள் இல்லை, அதனால் உங்களுக்கு இது பெரிய விடையமில்லை ” என கூறி இருவர் பெயரையும், குறிப்பாக சேரனின் பெயரை பரிந்துரைத்தார்.

இதற்கு வனிதா அணியில் இருந்து கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அதில் சில நாட்களுக்கு முன் சக போட்டியாளரான சரவணன், சேரன் குறித்து தெரிவித்த கருத்தொன்றில் “தான் பட வாய்ப்பு தருமாறு சேரனிடம் கேட்ட போது , சேரன் அதற்கு “நீங்கள் எவ்வளவோ வெற்றியை பார்த்துவிட்டிர்கள்” என குறிப்பிட்டு சேரன் அளித்த பதில் தனக்கு வலித்ததாக கூறியுள்ளார்.

இப்போது அந்த வீடியோவே சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
நேற்றைய நிகழ்வில் கவினின் பரிந்துரையில் விதி மீறல்கள் இல்லை என கமல் குறிப்பிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Lesson For Cheran

Related posts

கேரளாவில் விஜய்க்கு சிலை வைத்த ரசிகர்கள்

Rasikan

சிவகார்த்திகேயன் படத்தில் பாலிவுட் பிரபலம்

Rasikan

2019 இந்தியாவின் பிரபலங்கள் பட்டியலில் தமிழில் ரஜினி முதலிடத்தில், அஜித்தை விட விஜய் முன்னிலையில்

Rasikan