Madhumitha Threatens Vijay TV

தற்கொலை செய்துகொள்ளப்போவதாக விஜய் டீவியை மிரட்டும் மதுமிதா

Bigg Boss Tamil News

போலீசில் தனியார் தொலைக்காட்சி புகார்

Madhumitha Threatens Vijay TV

விஜய் டீவியை மிரட்டும் பிக்பாஸ்’ மதுமிதா

கமல் தொகுத்து வழங்கும் பிக் போஸ் நிகழ்ச்சியில் தற்கொலை முயற்சி மேற்கொண்டு சர்ச்சைக்குரிய முறையில் இடையில் வெளியேறிய நடிகை மதுமிதா மீது தற்போது போலீசில் தனியார் தொலைக்காட்சி நிர்வாகம் புகார் கொடுத்துள்ளது.

ஏசியென்நெட் ஸ்டார் கம்யூனிகேசன்ஸ் தனியார் நிறுவனம் சார்பில், அதன் சட்டப்பிரிவு மேலாளராக இருப்பவர் பிரசாத் கிண்டி காவல் நிலையத்தில் புகார் ஒன்றை கொடுத்துள்ளார்.

அதில் “தனியார் தொலைக்காட்சியில் நடந்து கொண்டிருக்கும் பிக்பாஸ் -3 என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகை மதுமிதா தன்னை காயப்படுத்தி கொண்ட காரணத்தினால் 50 நாட்களில் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார். காயத்திற்கு சிகிச்சை அளிக்கப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டார். அவர் செல்லும் போது, நிகழ்ச்சியில் கலந்து கொண்டதற்கான பில் அனுப்பி வைக்கப்பட்டது. ஒப்பந்தத்தில் கூறியபடி மதுமிதா, ஏற்கனவே 11 லட்சத்து 50 ஆயிரம் பெற்றுள்ளார். மீதமுள்ள ஒரு நாள் 80,000 ரூபாய் வீதம் 42 நாட்களுக்கான பாக்கி பணத்தை திருப்பி தருவதாக கூறியிருந்தோம்.

அதை ஒப்புக் கொண்டு சென்றார். பிறகு கடந்த 19ம் தேதி பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் டீனா என்பவருக்கு தொலைபேசி வாட்ஸ் அப் எண்ணிற்கு வாய்ஸ் மெசேஜ் மூலமாக நடிகை மதுமிதா மிரட்டல் விடுத்துள்ளார். பணத்தை இரண்டு நாட்களில் தரவில்லை என்றால் “தற்கொலை செய்து விடுவேன்” என்று மிரட்டி உள்ளார்” என்று புகாரில் கூறியுள்ளார். இதுகுறித்து காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Madhumitha Threatens Vijay TV

Tagged

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *