Tamil Cine Koothu
Bigg Boss Tamil News

பிக் பாஸ்சிலிருந்து உடனடியாக விலகுமாறு கமலுக்கு அழுத்தம் கொடுக்கும் கமலின் கட்சி உறுப்பினர்கள்!!!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து கமல் உடனடியாக விலக வேண்டும் என மக்கள் நீதி மைய கட்சி உறுப்பினர்கள் கமலிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரியவருகிறது.

மக்கள் நீதி மையம் கட்சியின் மீது அக்கறை கொண்ட தொண்டர்களும், முக்கிய உறுப்பினர்கள் பலரும் சேர்ந்து இந்த கோரிக்கையை கமலிடம் முன்வைத்துள்ளதாக கூறப்படுகிறது.

அதில் பிக் பாஸ் நிகழ்ச்சியினை ஏற்கனவே தமிழ் உணர்வாளர்கள், தமிழ் கலாச்சரத்துக்கு எதிரான நிகழ்ச்சி என பிரச்சாரம் செய்துவரும் நிலையில் அதனை ஒருவழியாக சமாளித்துவரும் மக்கள் நீதி மையத்தின் உறுப்பினர்கள் ,

பிக் பாஸ் நிகழ்ச்சியில் காணப்படும் நேர்மையற்ற தன்மை அல்லது மக்களின் முடிவுகளுக்கு எதிராக செயப்படுவதனால் உண்டாகும் எதிர்வலைகள் காரணமாக கமலின் நேர்மை விம்பங்களும், அதனால் கட்சியின் நேர்மை விம்பங்களும் பொது வழிகளில் கேள்விக்குள்ளாக்கி வருவதையிட்டு கவலைகொண்டுள்ளனர்.

குறிப்பாக தர்சனின் வெளியேற்றத்தை தொடர்ந்து பிக் பாஸ் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களை தவிர்த்து, ரசிகர்கள் பலர் கமலின் நேர்மைத் தம்மை குறித்து கேள்வி எழுப்பி வருகின்றார். கமல் ஒரு நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்தாலும் இவாறான முடிவுகள் கமலுக்கே சிக்கல்களை கொடுத்துவருகின்றன.

இதனால் இப்பொது கூடவே இருக்கும் பல தொண்டர்களும் மக்களும் கூட கமல் மீது எரிச்சலைடைய தொடங்கியுள்ளனர்.

ஏற்கனவே கட்சியினை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்வதில் பல சிரமங்களை சந்தித்துவரும் மக்கள் நீதி மையம், இதன் மூலம் ஏற்கனவே இருக்கும் தொண்டர்களையும் மக்களையும் இழப்பதற்கு இவ் பிக் பாஸ் நிகழ்ச்சி வழிசமைத்து வருவதாக உறுப்பினர்கள் கமலிடம் எடுத்து சொல்லியுள்ளதாக கூறப்படுகிறது.

இனி இதுகுறித்த இறுதி முடிவு கமலிடம் உள்ளது என கட்சி உறுப்பினர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

Makkal Needhi Maiam Members Request To Kamal To Leave From Bigg Boss

Related posts

சேரன் பிக் பாஸ் போயிருக்க கூடாது – மனோ பாலா

Rasikan

ஆண்மை இல்லாத்தனம் – 96 பட இசையமைப்பாளரை தாக்கிய இளையராஜா

Rasikan

இளையராஜா சுட்ட பாடல்கள்

Rasikan