ரஜினி, கமல் ஆகியோரின் அரசியல் பயணங்கள் பல திராவிட கட்சிகளுக்கு நெருக்கடிகளை கொடுத்து வருகிறது. இதனால் கிடைக்கும் சந்தர்ப்பங்களில் எல்லாம் ராஜினி, கமலை வெளுத்து வாங்கி வருகின்றனர் திராவிட கட்சியினர்.
இந்நிலையில் கமல் 60 நிகழ்வில் கமல்-ரஜினியின் ஒருங்கிணைந்த அரசியல் பயணங்கள் குறித்து கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை ஆளும் தமிழக அரசு சார்பில் பல அமைச்சர்களும் கடுமையாக விமர்ச்சித்துவரும் நிலையில் கைத்தறிதுறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் ” மூத்த நடிகர்கள் என்ற முறையில் நடிகர் சங்கத்தையே ஒழுங்காக வழிநடத்த தெரியாதவர்கள் நாட்டை திருத்த வருவதாக கூறுவது எந்த வகையில் நியாயம்” கிண்டலுடன் விமர்ச்சித்துள்ளார்.
மேலும் கருத்து தெரிவித்துள்ள அமைச்சர் “நடிகர் சங்க தேர்தல் பிரச்சனை, கட்டிடம் கட்டுவதில் பிரச்சனை என இவற்றுக்கே வழிகாட்ட முடியாதவர்கள், நாட்டிற்கு வழிகாட்டுவார்களா? எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

minister blast rajini and kamal