Tamil Cine Koothu
News

இந்திய திரைப்படங்களுக்கு பாகிஸ்தான் தடை

பாகிஸ்தான் தகவல் தொடர்புத்துறை
மந்திரி

புல்வாமா தாக்குதலுக்கு இந்தியா சார்பில் இன்று பதிலடி கொடுக்கப்பட்ட நிலையில், இந்திய திரைப்படங்கள் பாகிஸ்தானில் வெளியாகாது என்று பாகிஸ்தான் தகவல் தொடர்புத்துறை மந்திரி தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், இந்திய திரைப்படங்களுக்கு பாகிஸ்தான் திரைப்பட விநியோகஸ்தர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதையடுத்து, இந்திய படங்கள் பாகிஸ்தானில் வெளியாகாது என்று பாகிஸ்தானின் தகவல் தொடர்புத்துறை மந்திரி சவுத்ரி ஃபவாத் ஹூசைன் தெரிவித்துள்ளார். இதுமட்டுமின்றி இந்திய விளம்பரங்களை புறக்கணிக்கவும் பாகிஸ்தான் தொலைதொடர்புத்துறை அறிவுறுத்தியுள்ளது.

முன்னதாக பாகிஸ்தானுக்கு கடும் கண்டனம் தெரிவிக்கும் வகையில், அனைத்து இந்திய திரை தொழிலாளர் சங்கம், இந்திய திரையுலகில் பாகிஸ்தானைச் சேர்ந்த எந்த திரைப்பட கலைஞர்களும் பணியாற்ற முடியாது என்று தடை விதித்திருந்தனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

Related posts

ராகுல் ப்ரீத் சிங்கின் புதிய அசத்தல் கவர்ச்சி போட்டோஷூட் படங்கள்

Rasikan

மாரி சுப்பராஜ் இயக்கத்தில் தனுஷ், படத்தின் கதாநாயகி இவர்தான்!!!

Rasikan

சூர்யா, கார்த்தி கலந்துகொண்ட பொன்மகள் வந்தாள் பூஜை வீடியோ

Rasikan

Leave a Comment