Tamil Cine Koothu
News

காவி சாயத்துக்கு திருவள்ளுவரும் சிக்க மாட்டார், நானும் சிக்க மாட்டேன் ரஜினிகாந்த் அதிரடி

ரஜினிகாந்த் அதிரடி

கமல்ஹாசன் அலுவலகத்தில் கே.பாலசந்தர் அவர்களின் சிலை திறப்பு விழாவில் கலந்து கொண்ட ரஜினிகாந்த் பத்திரிகையாளர்களையும் சந்தித்தார்.

இதில் திருவள்ளுவரை காவியாக மாற்ற முயற்சித்ததால் தமிழகத்தில் கடந்த சில நாட்களாக ஏற்பட்டிருக்கும் பரபரப்பு, மற்றும் பிஜேபி உடனான அரசியல் குறித்து கருத்து தெரிவித்துள்ள ரஜினிகாந்த்
“திருவள்ளுவருக்கு காவி உடை அணிவித்தது பாஜவின் தனிப்பட்ட விருப்பம், அதனை சர்ச்சையாக்கி இருக்க வேண்டியதில்லை. மேலும் திருவள்ளுவரைப் போல எனக்கும் காவிச்சாயம் பூச முயற்சி நடக்கிறது. காவி சாயத்துக்கு திருவள்ளுவரும் சிக்க மாட்டார். நானும் சிக்க மாட்டேன்” என்று ரஜினிகாந்த் கூறியுள்ளார்.

இதனால் ரஜினிகாந்த் அரசியலில் பாஜகவுடன் கூட்டு வைப்பர் என்கிற அரசியல் எதிரிகளின் பிரச்சாரத்துக்கு ரஜினி தக்க பதிலடி கொடுத்துள்ளதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Rajinikanth Strong Reply To BJP

Related posts

பாபி சிம்ஹாவை பழிவாங்க நினைக்கிறார்களா??

Rasikan

ஏமி ஜாக்சனின் கல்யாணத்துக்கும் கவர்ச்சிக்கும் தொடர்பு இல்லையாம்

Rasikan

கார்த்தி, ராஷ்மிகா நடிக்கும் படத்திற்கு ரஜினி பட தலைப்பு

Rasikan