
கமல் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் வீட்டில் ஒவ்வொரு வாரமும் ஒரு போட்டியாளர் வெளியேற்றப்பட்டு வரும் நிலையில் இந்த வாரம் எவிக்சன் பட்டியலில் தர்ஷன், சாண்டி, சேரன் மற்றும் கஸ்தூரி ஆகியோர் உள்ளனர்.
இந்த நால்வரில் சேரன், கஸ்தூரி மிகக்குறைந்த சதவிகித வாக்குகளே பெற்றுள்ளார்.
இந்நிலையில் இவ்விருவரில் ஒருவரை ரகசிய அறைக்கு அனுப்ப முடிவெடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
பிக்பாஸ் வைல்ட் கார்ட் எண்ட்ரியாக உள்ளே வந்த கஸ்தூரியிடம் பார்வையாளர்கள் அதிகம் எதிர்பார்த்த நிலையில், இதுவரை அவர் உருப்படியாக ஒன்றும் செய்யவில்லை. இதனால் இவரை ரகசிய அறைக்கு அனுப்பி மீண்டும் உள்ளே விடுவதிலும் பார்க்க, சேரனை ரகசிய அறைக்குள் அனுப்பி பிக் பாஸ் போட்டியை இன்னும் சுவரிஸம் ஆக்கலாம் என முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அதிலும் குறிப்பாக சேரன் வெளியேறியபின் சேரன் குறித்து பலர் புறம் பேச கூடிய வாய்ப்புகள் உண்டு, அதிலும் குறிப்பாக லொஸ்லியா, கவின் ஆகியோரின் நடவெடிக்கைகளையும் சேரன் ரகசிய அறையில் இருந்து கண்காணித்து விட்டு, மீண்டும் பிக் பாஸ் வீட்டினுள் செல்வார்.
இது இன்னும் போட்டியின் சுவரிஷத்தை அதிகரிக்கும் என எதிர்பார்க்கலாம்.
ஆனால் சேரனா, கஸ்தூரியா என்பது நாளை தெரியவரும்.