சூர்யா 39 இல் ஜோடியாகும் காஜல் அகர்வால்!!!

News

சூர்யா 39 இல் ஜோடியாகும் காஜல் அகர்வால்!!!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சூர்யா, நடிப்பில் தற்போது சூரரைப்போற்று திரைப்படம் உருவாகி வருகிறது. இந்நிலையில் சூர்யாவின் காப்பான் திரைப்படம் செப்டம்பர் 20-ம் தேதி திரைக்கு வர உள்ளது.

அதனைதொடந்து சூர்யா சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாக உள்ள சூர்யா 39 படத்தில் நடிக்க உள்ளார்.

இந்நிலையில் இத்திரைப்படத்தில் நாயகியாக காஜல் அகர்வால் நடிக்க உள்ளதாகவும், இதுகுறித்த பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுவருவதாகவும் கோடம்பாக்க செய்திகள் தெரிவிக்கின்றன.

ஏற்கனவே காஜல் அகர்வால், சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித்துக்கு ஜோடியாக விவேகம் திரைப்படத்திலும், சூர்யாவுக்கு ஜோடியாக மாற்றான் படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Surya 39 Heroine Kajal Agarwal

Tagged

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *