ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை வைத்து இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கும் ‘தலைவி’ திரைப்படத்தில் ஜெயலலிதாவாக கங்கனா ரனாவத் நடித்து வருகிறார்.
மேலும் இக்கதையினை ‘குயின்’ என்ற பெயரில் இணையதள தொடராக கவுதம் மேனன் இயக்கி வருகிறார்.
இந்நிலையில் தன் அனுமதியில்லாமல் தலைவி படத்தையும், இணையதள தொடரையும் தயாரிக்க தடை விதிக்க கோரி ஜெ.தீபா சென்னை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இதனையடுத்து இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட மனுவினை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் , ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக எடுக்க தடை கோரி உரிமையியல் வழக்கு தொடர ஜெ.தீபாவிற்கு அனுமதி அளித்துள்ளது.
இதனையடுத்து ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து எடுக்கப்படும் அனைத்து முயற்சிகளும் சிக்கல்களை எதிர்கொண்டுள்ளது.
Thalaivi movie in trouble