Tamil Cine Koothu
News

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன்

SK 17 – லைக்கா

மிஸ்டர் லோக்கல் திரைப்படம் மிக விரைவில் வெளிவர இருக்கும் நிலையில், சிவகார்த்திகேயன் அடுத்ததாக விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியிருக்கிறார்.

ராஜேஷ் இயக்கத்தில் , சிவகார்த்திகேயன்,நயன்தாரா நடிப்பில் தற்போது ‘மிஸ்டர்.லோக்கல்’ திரைப்படம் உருவாகியுள்ளது.

இப்படத்தை தொடர்ந்து, இன்று நேற்று நாளை பட இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்திலும், இரும்புத்திரை இயக்குனர் பி.எஸ்.மித்ரன் இயக்கத்திலும், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பாண்டிராஜ் இயக்கத்திலும் நடிக்க ஒப்பந்தம் ஆகியிருக்கும் சிவகார்த்திகேயன்,

லைகா நிறுவனம் தயாரிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாக இருக்கும் படத்திலும் அடுத்து சிவகார்த்திகேயன் நடிக்க உள்ளார். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க இருக்கிறார்.

மேலும் இப்படத்தின் படப்பிடிப்பு இந்த வருடம் ஜூலை மாதம் தொடங்க இருப்பதாகவும், 2020 இப்படம் வெளியாகும் என்று படத்தை தயாரிக்கும் லைக்கா நிறுவனத்தினர் அறிவித்துள்ளனர்.

Related posts

சஞ்சிகைக்கு கவர்ச்சி போஸ் கொடுத்த நயன்தாரா [ வீடியோ இணைப்பு]

jasi

அமீர் கான் போடும் நிபந்தனைகளால் தள்ளிப்போகும் விக்ரம் வேதா ஹிந்தி ரீமேக்

Rasikan

குடும்பத்துடன் சாண்டி வீடு சென்ற சரவணன்

Rasikan

Leave a Comment