Tamil Cine Koothu
News

நயன்தாரா ஏன் பேட்டி கொடுப்பதில்லை? – அவரே சொன்ன காரணம்!!!

தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவர் நடிகை நயன்தாரா.

ஹீரோயினுக்கு முக்கியத்தும் உள்ள படங்களில் அதிகளவில் நடித்துவரும் நயன்தாரா, தன்னுடைய எந்த படங்களின் விளம்பர நிகழ்ச்சிகளுக்கும் வருவதில்லை. இது திரையுலகில் பல குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகி வருகிறது.

இந்நிலையில் இதுகுறித்து நீண்ட வருட மௌனத்தின் பின் நயன்தாரா ஒரு மாத இதழுக்கு அளித்துள்ள பேட்டியில் விளக்கியுள்ளார்.

அதில் “நான் என்ன நினைக்கிறேன் என்பதை உலகம் தெரிந்துகொள்ள வேண்டாம் என நினைக்கிறேன். நான் தனிமையை விரும்பும் ஒருவர். கூட்டம் என்றால் சமாளிப்பது கடினம். மேலும் பல சமயங்களில் நான் பேசியதை தவறாக மாற்றி சித்தரித்துவிடுகிறார்கள். அதனால் வரும் சிக்கல்களை சமாளிப்பது எனக்கு கடினமாக உள்ளது. என்னுடைய வேலை நடிப்பது மட்டுமே. மற்றதை என் படங்களே பேசும்” என தெரிவித்துள்ளார்.

நயன்தாரா தற்போது ரஜினியின் தர்பார், விஜயின் பிகில் திரைப்படங்களிலும் நடித்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Why Does Not Give Nayanthara Interview?

Related posts

சூர்யாவின் அடுத்த படத்தை இயக்கப்போவது இவரா?

Rasikan

மிரட்டும் விஜய்யின் பிகில் வியாபாரம்

Rasikan

சிவாஜி ரசிகர்களுக்கு பிகில் பேச்சு குறித்து விவேக் விளக்கம்

Rasikan