Tamil Cine Koothu
News

உடைந்தது மெகா கூட்டணி – காரணம் யாரோ????

Yuvan Shankar Raja Out From Magical Combo
Yuvan Shankar Raja Out From Magical Combo

கலைப்புலி எஸ் தாணு தொடர்ந்து அடுத்தடுத்து தனுஷ் நடிப்பில் மூன்று திரைப்படங்களை தயாரிக்கவுள்ள நிலையில், அதில் ’அசுரன்’ திரைப்படம் வரும் வெள்ளியன்று வெளியாக உள்ளது.

அதனை தொடர்ந்து ’பரியேறும் பெருமாள்’ இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்க அதிலும் தனுஷ் நடிக்கவுள்ளார்.

அதனை தொடர்ந்து ’மயக்கமென்ன’ படத்திற்கு பிறகு மீண்டும் தனுஷ்-செல்வராகவன் கூட்டணியில் உருவாகும் திரைப்படத்தையும் தாணு தயாரிக்கவுள்ளார்.

செல்வராகவன் – தனுஷ் – யுவன் சங்கர் ராஜா மெகா கூட்டணி இணையும் திரைப்படமாக இது அமையும் என கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது இவ் மெகா கூட்டணியில் இருந்து யுவன் சங்கர் ராஜா வெளியேறியுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் புதிய தகவலின்படி இத்திரைப்படத்துக்கு தனுஷ் நடித்த பா.பாண்டி மற்றும் ’வேலையில்லா பட்டதாரி 2’ ஆகிய படங்களுக்கு இசையமைத்துள்ள சீன் ரோல்டான் இசையமைக்க உள்ளதாக கூறப்படுகிறது.

யுவன் சங்கர் ராஜாவை தவிர்த்து ‘சீன் ரோல்டான்’ வை தனுஷே சிபாரிசு செய்ததாக கூறப்படும் நிலையில் இதனால் இவர்களுக்கிடையில் எதாவது விரிசல் ஏற்பட்டுள்ளதா என ரசிகர்கள் கேள்வி எழுப்பிவருகின்றனர்.

Yuvan Shankar Raja Out From Magical Combo

Related posts

முதல் மூன்று இடங்களில் நேர்கொண்ட பார்வை ஹேஷ்டேக்

Rasikan

ஆபாச சைகையுடன் ட்ரைலர் – சர்ச்சையாக்கிய இளம் நடிகை

Rasikan

மம்முட்டி நடிப்பை விசிலடித்து கைதட்டி ரசித்த சாயிஷா

Rasikan

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.